அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதம் என ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘
அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது என்றும் அவர் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்,
கடந்த 9 ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். அதில், பொதுக்குழுவில் அன்புமணியின் தலைவர் பதவியை மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பு அனுப்பிய கடிதத்தில், அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்த நிலையில் நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாமக தலைவரின் பதவிக்காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் அதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அன்புமணியின் நடவடிக்கைகள் பாமகவின் அரசியல் சூழலையே பாழாக்கும் வகையில் உள்ளதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார். அன்புமணி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உளவுத்துறைக்கும் ராமதாஸ் தரப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
Read Time:2 Minute, 22 Second