சென்னையில் முதல்வர் ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் உள்ளிட்டோர் சந்தித்தனர்
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை ஆழ்வார்போட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொர்பான வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு பல்வேறு தரப்புகளிடமிருந்து வரும் பொதுவான கோரிக்கை, `ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் கொண்டு வேண்டும்’ என்பதுதான்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட கோரி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், 3 கட்சிகள் சார்பில் முதலமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்ட இயக்க கோரிக்கை வைத்தோம். தனி சட்டத்திற்கான தேவையை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம். அதனை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார் என ரெிவித்தார்.