Read Time:1 Minute, 4 Second
நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல் காலணியைச் சேர்ந்த வினோத் என்பவர் மயிலாடுதுறை நோக்கி தன்னுடைய மனைவி சுபஸ்ரீ, மகன் சர்வேஸ் பத்து மாத கைக்குழந்தையுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மயிலாடுதுறை அடுத்து வழுவூர் பண்டாரவாடை அருகே அவருடைய இரண்டு சக்கர வாகனம் பஞ்சராகி விட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர், அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா விபத்தில் காயமுற்று சாலை ஓரம் கிடந்த அவர்களை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தில் ஏற்றி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்