0 0
Read Time:1 Minute, 12 Second

மயிலாடுதுறையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்று தப்பிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் வெளிநாட்டில் வேலைபார்த்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று மதியம் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்துக்கு வந்த வீரபாண்டி, அங்கு நிலவிய கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மணல்மேடு செல்லும் பேருந்தில் ஏற முயன்ற சங்கீதா என்ற பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் சங்கீதா சத்தம் போடவே அங்கிருந்து வீரபாண்டி தப்பி ஓடியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி உதவியுடன் வீரபாண்டியை கைது செய்தனர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %