0 0
Read Time:1 Minute, 24 Second

சிதம்பரம் அடுத்த டி.எஸ்.பேட்டை கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
பி.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., அமுதா முன்னிலை வகித்தார்.

பரங்கிப் பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.முகாமில், 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், ஒன்றிய அவைத் தலைவர் நல்லதம்பி, துணை செயலாளர் கள் சதா இளவரசு, பொன்னுசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் மோகன்தாஸ், சாமி துரை, நிர்வாகிகள் விமலாதித்தன், சுபாகர், கோவிந்தராஜ், மோகன்காந்தி, விஜய குமார், ராஜ்மோகன், அன்பழகன், நடராஜமூர்த்தி, பார்த்திபன், தமிழ்வாணன் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %