சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின், நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு நாள் விழா சுவாமி சகஜானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
சிதம்பரம் இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் நெகிழி பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த.ஜெயராமன், உதவி தலைமை ஆசிரியர் வெ.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர், பள்ளியின் தலைமை ஆசிரியை வ.எழிலரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் இன்னர்வீல் சங்கத்தின் தலைவி கோமதி கோவிந்தராஜன், வரலட்சுமி கேசவன் ஆகியோர் கலந்துகொண்டு நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும், சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் இருக்க துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பேசினார்கள்.
அனைவருக்கும் துணி பைகளை வழங்கினார்கள், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பற்றி மாணவிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினார்கள், மணிமண்டபம் வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நட்டனர்,விழா ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நல பணித் திட்ட உதவி அலுவலர் பி.கலாராணி செய்தார், நன்றியுரை வேதியியல் ஆசிரியை டி. உஷாராணி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி