புவனகிரியில் பாஜக சார்பில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதற்கு மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் அர்ச்சனா ஈஸ்வர் தலைமை தாங்கி முகாமை தொடக்கி வைத்தார் மாவட்ட துணைத் தலைவர் திருமாவளவன் பட்டியலணி முன்னாள் மாநில துணைத்தலைவர் வெற்றிவேல் ஒன்றிய பொதுச் செயலாளர் பயனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய தலைவர் லட்சுமி நரசிம்மன் வரவேற்றார் அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வரர் ராஜலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் முகாமில் கடலூர் மாவட்ட அரசு கண் மருத்துவ குழு திட்ட மேலாளர் டாக்டர் சங்கீதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர் இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் புவனகிரி சட்டமன்ற முன்னாள் பொறுப்பாளர் விஜயரங்கன் மாவட்ட துணை தலைவர் மாலா முன்னாள் மாவட்ட துணை தலைவர் உமாபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி