0 0
Read Time:2 Minute, 51 Second

உலக இருதய தினத்தை முன்னிட்டு சென்னை கோவூர் மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் விருத்தாம்பாள் அரிகோவிந்தன் அவர்களின் நினைவாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K.A.பாண்டியன் பங்களிப்பில், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

அரிசக்தி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் K.A.P. அரிசக்திவேல் அவர்கள் முகாமை தொடக்கி வைத்தார். மண்டல துணை ஆளுநர் S. புகழேந்தி, மண்டல செயலாளர் கலைச் செல்வன், மூத்த உறுப்பினர்கள் RM.ST. சுப்பையா, A. விஸ்வநாதன், முன்னாள் தலைவர்கள் G. சீனிவாசன், V. நடனசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் ரோட்டராக்ட் சங்கமான காமராஜர் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் மருத்துவ முகாமில் தன்னார்வலர்களாக கலந்து கொண்டனர்.

சென்னை கோவூர் மாதா உயர் சிறப்பு மருத்துவமனையைச் சார்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் Dr. J. ராகவ் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்ட 113 பயனாளிகளுக்கு இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனை இலவசமாக செய்தனர். அதில் 20 பயனர்களுக்கு இலவச உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை, முகாம் திட்ட தலைவர் N. கேசவன் மற்றும் துணைத் தலைவர் I. யாசின் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் செய்து இருந்தனர். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் P. பன்னா லால், G. சுனில் குமார் போத்ரா, S. சண்முகசுந்தரம், G.P. விஜயபாலன், S. முனுசாமி, N. பாவிக் பட்டேல், M. சுஷில் குமார் சல்லானி, R. வன்னியநாதன், சிவகுமார், R. அருள், K. பழனியப்பன், K. கார்த்திகேயன், K. இளவரசன், V. சேதுராமன் மற்றும் பொருளாளர் N. கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில், சங்கத்தின் செயலாளர் K. புகழேந்தி அவர்கள் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %