Read Time:1 Minute, 6 Second
புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குத்திட்டை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது புவனகிரி தாசில்தார் அன்பழகன் தலைமை தாங்கினார் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாமணி முன்னிலை வகித்தார்.
புவனகிரி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் வெற்றிவேல் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார் அதனைத் தொடர்ந்து முகாமில் அரசு அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் நிகழ்ச்சியில் புவனகிரி ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.