சிதம்பரம் சென்ட்ரல் ஹோட்டலில் சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வாக, சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. சாசன தலைவர் P. முகமது யாசின் அவர்களும், சாசன செயலாளர் M. தீபக்குமார் முன்னிலை வகித்தனர்.
அரசு காமராஜ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் P. லட்சுமி வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட Dr. அபிராமி செல்வகணபதி தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் குறித்து விளக்கினார். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் N. கேசவன், G. ஆறுமுகம், I. யாசின், Dr. வேதாந்த தேசிகன், M. வடிவேல், Km பழனியப்பன், R. வன்னியநாதன், C. புத்தநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் செயலாளர் K. புகழேந்தி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு சத்துமாவு, புரதச்சத்து மாவு, பேரிச்சம்பழம் உள்ளிட்டவை அடங்கிய ரூபாய் 400/- மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி