0 0
Read Time:1 Minute, 51 Second

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் பல மாவட்டங்களில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் அதில் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக ஆரம்பித்த மாவட்டமாகும் இங்கு முதல் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்ரீநாதா ஐபிஎஸ் விழுப்புரம் மாவட்டத்திற்கு எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய சுகுணா சிங் இடமாற்றம் செய்யப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

இவர் கோயமுத்தூரில் உள்ள பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் பட்ட படிப்பு முடித்த பிறகு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தவுடன் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்தார் அதன்பின், ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திருநெல்வேலி, நங்குநேரியில் உதவி போலீஸ் கமிஷனர், தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் என ஆகிய பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினார். ,என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்: ஜமால், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %