0 0
Read Time:1 Minute, 41 Second

100 டாலரை தாண்டலாம்’: ஈரான் அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 100 டாலரைத் தாண்டக்கூடும் என்று ஆய்வு நிறுவனமான, ‘வுட் மெக்கென்ஸி’ தெரிவித்துள்ளது.

அது மேலும் கூறியதாவது:

தற்போது மேற்காசியா பிராந்தியத்தில் ஏற்பட்டு உள்ள போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இது நீண்ட காலத்துக்கு நீடித்தால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 100 டாலராக உயரக்கூடும்.

உலக அளவில் 15 சதவீத எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகத்தான் பயணிக்கிறது. அதேபோல, உலகின் 20 சதவீத திரவ இயற்கை எரிவாயு, இதன் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி அருகில் சென்ற மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதை அடுத்து, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

அடுத்து, ஏற்றுமதி கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் எப்போது அனுமதிக்கப்படும் என்பதே முக்கிய கேள்வி. சரக்குப் பெட்டகங்களின் கட்டணமும் காப்பீட்டு செலவும் அதிகரித்தால், அது கடைசியில் எண்ணெயின் விலையில் சேர்ந்துவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %