கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம், வேங்கான் தெருவில் ஸ்ரீ குருநமச்சிவாயர் மடம் என்கிற தனியார் மடம் உள்ளது.
மறைந்த டிரஸ்டி வைத்தியநாத அய்யரிடம் தரை வாடகைக்கு காலி மனை பெற்று 50 வருடங்களாக சுமார் 60 குடும்பங்கள் மற்றும் தனியார் பள்ளி ஒன்றும் இருந்து வருகிறது. டிரஸ்டி வைத்தியநாத அய்யர் இறந்த பிறகு ஸ்ரீ குருநமச்சிவாயம் சன்னதி, மாணிக்கவா சகர் சன்னதி சுற்றி 23 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கட்டப்பட்டன. மறைந்த டிரஸ்டியின் மகன் வி.பசவராஜ் என்பவர் அந்த 23 வீடுகளை அகற்ற உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவும் பெற்றார். அவரால் அகற்ற முடியவில்லை. ஒரு கால கட்டத்தில் உயர்நீதிமன்றம் ஸ்ரீ குருநமச்சிவாயர் மடத்தை இந்து சமய அறநி லையத் துறையிடம் ஒப்படைத்து ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டது.
இந்த வீடுகளை அகற்றும் நிலை இருப்பதால், கூட்டத்தில் தற்போது சத்யா நகரில் வசிக்கும் மக்களின் வீடுகளை அகற் றக்கூடாது என்றும், கோவில் இடங்களில் கூட்டாக ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் அவர்களை வெளியேற்றம் செய்யாமல் வாடகைதாரர்களாக நியமனம் செய்து அவர்களிடம் வாடகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சட்டம் இயற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட் டுள்ளதால், வாடகைதாரர்களாக ஏற்க வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தராவிட்டால் இந்துசமய அறநிலையத் துறையை கண் டித்து சிதம்பரம் சார்ஆட்சியர் அலுவ லகம் முன் வருகிற ஜன.12இல் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட் டம் நடத்துவோம் என்றும் முடிவு செய் யப்பட்டது. கூட்டத்திற்கு முன்னாள் திமுக நகர செயலாளர் முத்து சாரங்கம் தலைமை வகித்தார் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சிவா கண்ணதாசன், சி.எஸ். ராமதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Read Time:2 Minute, 44 Second