Read Time:1 Minute, 15 Second
கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் (CDCA) இணைந்து கேஏஎஃப்டி செஸ் அகாதெமி இணைந்து திறந்தநிலை சதுரங்கப் போட்டியை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். பதக்கங்கள் மற்றும் காசோலைகளை வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை, வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் எஸ்.குமார், முதல்வர் டி.நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் பொனிகலா ஆகியோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.
சிதம்பரத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவர் நி.மைதிக்கிற்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்குகிறார் பள்ளி நிறுவனர் எஸ்.குமார்).