சிதம்பரத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் எம் எல் ஏ ஐயப்பன் முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி சரவணன் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஜேம்ஸ் விஜயராகவன் மாவட்ட பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் இளங்கோவன் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் இளைஞர் அணி அமைப்பாளர் அருள் தொழில்நுட்பு பிரிவு ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர்கள் சங்கர் மனோகர் சபாநாயகர் தங்க
ஆனந்தன் கலையரசன் நாராயணமூர்த்தி அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடலூர் தபால் நிலையம் அருகே 11ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி