0 0
Read Time:4 Minute, 8 Second

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறிய ஜெயக்குமார், திமுக கூட்டணியில் இருந்து கூட சில கட்சிகள் விலகக் கூடும் என்று கூறி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். கொங்கு மற்றும் டெல்டா பகுதிகளில் முதற்கட்டமாக மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கிறார்.

தற்போது இன்னும் 8 மாதங்களில் சிறப்பான கூட்டணியை அதிமுக அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். தற்போதைய சூழலில் பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறது. அதில் பாமக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி இணையும் முடிவில் இருக்கிறது. ஆனால் அதிமுகவோ தொடர்ச்சியாக தவெகவை கூட்டணியில் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுகவுடன் தவெக இணையும் பட்சத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற முடியும். ஆனால் தவெக தங்களின் தலைமையில் மட்டுமே கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் தீவிரமாக உள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அப்படியான மகத்தான வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் அப்படியானது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் அசத்தலான சாதனைகளை படைத்தோம்.

அதேபோல் திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியும், வெறுப்பும் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, காவல்துறையினரே கொலை செய்யப்படுவது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அப்படியான பிரச்சனைகள் இருந்ததே இல்லை. இதனால் அதிமுக இமாலய வெற்றியை பெறும். தொடர்ந்து, அரசியலில் 24 மணி நேரங்களில் மாற்றம் நடந்துள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் போது காட்சிகள் மாறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட விலகக் கூடும். அதனால் தமிழக அரசியலில் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %