0 0
Read Time:1 Minute, 54 Second

தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்த அதுல் ஆனந்த் சிறு, குறு தொழில் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் ஆர்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அலுவலக துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்ட இயக்குநரான அருண் தம்புராஜ் தேசிய சுகாதார திட்ட இயக்குநராக கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %