0 0
Read Time:1 Minute, 30 Second

மயிலாடுதுறை அருகே, உள்ள மாப்படுகை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது 44). இவர், அந்த பகுதியில் பேக்கரி் கடை வைத்து நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இவர், மயிலாடுதுறையில் மளிகை சாமான்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ெரயிலடி மேம்பாலம் அருகே காவேரி நகரில் சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று தட்சிணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %