Read Time:53 Second
சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 240 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பேரில், முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.