Read Time:1 Minute, 18 Second
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வரும் நிலையில், கள நிலவரத்தை உடனுக்குடன் பார்க்கலாம்!
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 4067 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 3000 வாக்குகளை பெற்று 2ம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 2377 வாக்குகளை பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், இடதுசாரிகள் ஒரு வாக்கை மட்டுமே பெற்றுள்ளது.


