0 0
Read Time:1 Minute, 36 Second

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று இரவு பரப்புரை மேற்கொண்டார். எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேர் தங்களது இன்னுயிரை இழந்தனர். ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா இருவரும் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளனர். ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணி மற்றும் அவருடைய மகள் தரணிகா நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரா, அருக்காணி, 10 வயது சிறுவன் பிரித்திக் ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

39 பேர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %