சிதம்பரம் அருகே குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குமராட்சி வர்த்தக சங்கத் தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கே.ஆர்.ஜி.தமிழ்வாணன் தலைமை தாங்கி, பிளஸ்-2தேர்வில் 600-க்கு 528 மதிப்பெண் பெற்ற சரோஜா என்ற மாணவிக்கு ரூ.15,000 மதிப்புள்ள செல்போனும், 10-ம் வகுப்பில் 500-க்கு 470 மதிப்பெண் பெற்ற மாணவி சோபிகாவுக்கு சைக்கிளும் மற்றும் 2-வது இடம் பிடித்த மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார்.
100 சதவீதம் தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகன், உதவி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர் குமரேசன், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர், பள்ளி மேலாண்மைகுழு தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி