Read Time:54 Second
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து மாணவ மாணவிகள் விழாவை கொண்டாடினார்கள். மாணவிகள் கும்மி அடித்தும் குலவை எழுப்பியும் புது பொங்கலை வரவேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.#mayiladuthurai pic.twitter.com/gDa2QXAzCy
— அகர முதல செய்திகள் (@aagaramuthalaa) January 13, 2023
விழாவில் கல்லூரி செயலர் முனைவர் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வர் முனைவர் சி.சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சூரிய வழிபாடு செய்து அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.

செய்தியாளர்:க சதீஷ்மாதவன்