Read Time:40 Second
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்த மழையால் பல நாட்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் சற்று தணிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தரங்கம்பாடி, செம்பனார்கோவில், பொறையாறு, காட்டுச்சேரி, காழியப்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.