0 0
Read Time:1 Minute, 51 Second

திருச்சி காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்தவர் சண்முகம்(வயது 50). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி சாரதா(45). சண்முகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று சாரதா வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அவரிடம், சண்முகம் மது குடிக்க பணம் கேட்டதாகவும், இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சாரதா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றியது. இதை கண்ட சண்முகம் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருடைய உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கணவன்-மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சாரதா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சண்முகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %