குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் சாய் தேஜாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் தனிப்பாதுகாவலரான சாய் தேஜாவின் உடல், டெல்லியில் இருந்து வான்வழியாக பெங்களூரு கொண்டு வரப்பட்ட நிலையில், சாலை மார்க்கமாக ஆந்திர மாநிலத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படும் சாய் தேஜாவின் உடலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சாய் தேஜாவின் உடல் அவரது சொந்த கிராமமான ரேகடாவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப் படை வீரரான பிரதீப் அரக்கலின் உடல் அவரது சொந்த ஊரான கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.