மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி படிக்கும் மாணவியை (15) பன்னீர்செல்வம் மகன் பிரவீன்குமார் என்பவன் கடந்த 4 -ஆம் தேதி அன்று மாணவியின் பெற்றோர்கள் வெளியில் சென்ற சென்ட்ரல் நிலையில் வீட்டிற்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான். பின்பு மாணவியின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் இல்லாததைக் கண்டு அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் அருகிலுள்ள இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளி மாணவியை கடத்தி சென்ற பிரவீன்குமார் என்பவன் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.