0 0
Read Time:2 Minute, 30 Second

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

கனிமொழி கருணாநிதி, (துணைப் பொதுச் செயலாளர்) தலைமையில்

டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தித் தொடர்பு தலைவர்)
கோவி.செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்)
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்)
டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்)
எம்.எம். அப்துல்லா, (அயலக அணிச் செயலாளர்)
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர்)
எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச் செயலாளர்)
கார்த்திகேய சிவசேனாபதி (சுற்றுச்சூழல் அணிச் செயலாளர்)
ஆ. தமிழரசி ரவிக்குமார் (மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்)
ஜி.சந்தானம், (இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஓய்வு)
சுரேஷ் (சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர்). இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %