சிதம்பரம்,ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியின், நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம், சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது, இதில் மூன்றாம் நாள் நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ம.தர்மராஜ் வரவேற்புரை நல்கினார், சரண் மித்தேஷ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சிதம்பரம்,அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் வெ.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவதையும், உலக வெப்பமயமாவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றியும், பேசினார், முகாமில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தோட்டத்தில் வைக்கக்கூடிய விதை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு வினாடி வினா நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது, பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது, விழா ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர் கே. முரளி செய்தார், நன்றி உரை மாணவர் பிரதீப் குமார் கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி