0 0
Read Time:4 Minute, 58 Second

சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டானின் நடத்திய தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். குற்ற உணர்ச்சியே இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் பேசுவதாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்று சொல்வதற்கு நா கூசவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவலர்களின் கொடூர தாக்குதலால் உயிரிழந்திருக்கிறார். தண்ணீர் கூட கொடுக்காமல், மிளகாய் பொடியை பிறப்புறுப்பிலும் வாயிலும் திணித்து போலீசார் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருத்தம் தெரிவித்த முதல்வர் தற்போது வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு செல்ஃபோன் மூலமாக ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடக்கக் கூடாத விஷயம் நடந்துவிட்டது.. மன்னித்துவிடுங்கள்.. நிச்சயம் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். எடப்பாடி பழனிசாமி பதிவு இதன்பின் அந்த வீடியோவை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தியிலும் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம். கொலை செய்தது உங்கள் அரசு. “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. குற்ற உணர்ச்சி இல்லையா? அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, “தைரியமாக இருங்கள்” என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு? முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? “என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்” என்று சொல்கிறீர்களே… போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?

அதிமுக தொடர்ந்த வழக்கு வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்? அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது. 25வது முறை உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா? “நடக்கக் கூடாதது நடந்துடுச்சு” என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை! இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %