0 0
Read Time:1 Minute, 0 Second

சீா்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியா்கள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

சீா்காழி தென்பாதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் 7 ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கி திங்கள், செவ்வாய் ஆகிய இருதினங்களாக மூடப்பட்டு, வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யபட்டது. ஏற்கெனவே சனி, ஞாயிற்றுக்கிழமை வங்கிக்கு தொடா் விடுமுறையாக என்பதால், வங்கி வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %