Read Time:58 Second
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நதிப்போரா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைவிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்.
அவர்களில் ஒருவன் வெளிநாட்டைச் சேர்ந்தவன் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தீவிரவாதி கடந்த மார்ச் மாதம் காஷ்மீரில் இரு கவுன்சிலர்கள் மற்றும் ஒரு காவலர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புள்ளவன் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.