மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சீர்காழி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வக்கீல் சுந்தரய்யா தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் வரதராஜன், தேவகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஜெயக்குமார் வரவேற்றுப் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து எடமணல், திருநகரி, மங்கைமடம் வழியாக மயிலாடுதுறைக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும்.
பூம்புகாரில் சேதம் அடைந்த நிலையில் உள்ள கலைக் கூடத்தை சீரமைக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தின் மையப்பகுதியான வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.