நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பீகாரில் பள்ளிகளுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பெரியோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பீகாரில் பாட்னா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பாட்னா, ரோஹ்தாஸ், சமஸ்திபூர், ஜமுய், கைமூர், சிதாமர்ஹி, பூர்னியா, ஷேக்புரா, போஜ்பூர் மற்றும் மேற்கு சம்பரான் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் அதிகாலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் கோடை விடுமுறை தொடங்கும் வரை இந்த புதிய நேரம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.