சென்னை,குழந்தைகளுக்கு கேக்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு, குழந்தைகள் தினத்தை யொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டது. பல்வேறு கேக் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் இதற்கான டெண்டரை பெற்றுள்ளன. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்கும் வகையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது..முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
கொள்முதல் செய்யப்பட்ட கேக் துண்டுகள் பள்ளிகளுக்கு மிக பாதுகாப்பான முறையில் அனுப்பப்பட்டுள்ளது. முதல் முறையாக செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கொளத்தூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்க இருக்கிறார்.
முதலில் இந்த திட்டத்தை அம்பாசமுத்திரம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த செயல் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இதற்கான நிகழ்ச்சி, கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடக்க உள்ளது. காலை 9 மணிக்கு இந்த திட் டத்தை தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் கேக் வழங்குகிறார். அவர்களுக்கு குழந்தை கள் தின வாழ்த்து அட்டைகளையும் அவர் வழங்குகிறார். தொடர்ந்து, தொகுதியில் நல உதவிகளையும் அவர் வழங்க இருக்கிறார்.கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், தொகுதியில் நலத் திட்ட பணிகளை முதல்-அமைச்சரே தொடங்கி வைக்க இருக்கிறார்.
முதல்-அமைச்சர் விஜய் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. .கொளத்தூரில் தொடங்கி வைக்கப்படும் அதே நேரத்தில் தமி ழகம் முழுவதும் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப் பட உள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்படுகிறது.