சிதம்பரம் நகர அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மு. அமைச்சர் செல்வி ராமஜெயம் இணை செயலாளர் ரங்கம்மாள் பாசறை செயலாளர் வசந்த் மாவட்ட பொருளாளர் சுந்தர் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏள்ளேரி பிரபு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் பங்கேற்று வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் குமார் வர்த்தக அணி செயலாளர் கோதை வசந்தகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரங்கசாமி, நகர பேரவை செயலாளர் சுரேஷ் பாபு,நகர மன்ற உறுப்பினர் சித்ரா, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம், நகர பொருளாளர் மருதவாணன், மாவட்ட பிரதிநிதி மார்க்கெட் நாகராஜ், உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி