Read Time:1 Minute, 2 Second
எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது வயது 74. இவர் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் இருமுறை எம்.எல.ஏ ஆக இருந்து உள்ளார். எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பொன்னுசாமி. முன்னதாக 2016ஆம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட பொன்னுசாமி தோல்வியை தழுவினார்.