தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் tntenders.gov மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனைக்கு ஆன்லைன் டெண்ரை வரவேற்கிறது
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பல்வேறு பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மூலம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணையவழி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் டெண்ரை வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமக்காலம், விண்ணப்பிக்கும் முறை, செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை மற்றும் இதர விவரங்கள், ஒப்பந்தபுள்ளி படிவங்களை tntenders.gov என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அம்மா குடிநீர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி அரசு பேருந்து நிலையங்களில் 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.