0 0
Read Time:3 Minute, 9 Second

“வேட்டையாட வரும் சிங்கம் அல்ல..வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” என விஜய் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

தவெக தலைவர் விஜய், “வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் பாமகவில் இருந்தவன். இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. இது ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனைதான். இருவரும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து கொள்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த சீமான், “பள்ளிக் குழந்தைகளை பசியோடு பள்ளிக்கு வர வைத்ததுதான் திமுக அரசின் சாதனை” என்று சாடினார். மேலும், “இலவசங்களை கொடுத்து மக்களைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களைத் தலை நிமிர வைப்பேன் என்று கூறுவது சாதனை அல்ல, வேதனை” என்று கூறினார்.
விஜய்யின் அரசியல் குறித்துத் தொடர்ந்து பேசிய சீமான், “ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. மக்களுக்காக மக்களிடம் நேரடியாகச் சென்று நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு. ஆனால், விஜய் அவ்வாறு மக்களைச் சந்திக்கவில்லை. ஒரு நட்சத்திரப் பிரபலம் என்றால் வாக்குகள் மட்டும் கேட்க வருவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் “விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” என்று தெரிவித்த சீமான், “2026 தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும்போதுதான் விஜய்யின் உண்மையான செல்வாக்கு என்ன என்பது தெரியும்” என்று சவால் விடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %