0 0
Read Time:1 Minute, 52 Second

ஆந்திர முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது 371 கோடி ரூபாய் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான முறைகேட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு சந்திரபாபுவை கைது செய்தவற்காக அவரது சொந்த ஊரான நந்த்யால் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு டிஐஜி தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது கைதுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு இது சட்டவிரோதம் என போலீசாரிடம் தெரிவித்தார்.அப்போது அங்கு கூடியிருந்த தெலுங்கு தேசம் தொண்டர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு சந்திரபாபுவை கைது செய்த போலீசார்,பலத்த பாதுகாப்புடன் விஜயவாடாவுக்கு அழைத்து சென்றனர்.சந்திரபாபு நாயுடு கைது தொடர்பான தகவலை அறிந்த தெலுங்கு தேச கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %