பிப்ரவரி:1 – 2023
திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவாரூர் இராஜன்கட்டளை மடத்திற்கு சொந்தமான கிடாரங்கொண்டான் ஸ்ரீசுந்தரபார்வதி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில்
இன்று மாலை புனித நீர் தாங்கிய கடங்கள் யாகசாலை பிரவேசமும் அதனைத் தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜை பூர்ணாஹீதி, தீபாராதனை ஆகியவை ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசன்னிதானம் திருமுன்னர் நடைபெற்றது.
இவ்விழாவில் தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள், அடியார் பெருமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.
சுவாமி அம்பாள், ஸ்ரீ விநாயகர் பரிவார மூர்த்திகளுக்கும் ஜுர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா தருமையாதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசன்னிதானம் திருமுன்னர் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

வரும் (03.02.2023) வெள்ளி கிழமை காலை நான்காம் காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹீதி மகா தீபாராதனை உடன் புனித நீர் தாங்கிய கடன்கள் புறப்பாடாகி காலை 9:30 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும், மாலை 5 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறும்.
இவ்விழாவில் சைவ ஆதீனங்கள், திருமணத்து அதிபர்கள், சைவ மடாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பக்தகோடிகள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு நிர்வாகம் தெரிவித்துள்ளார்கள்.
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்