0 0
Read Time:2 Minute, 14 Second

தமிழக அரசை எதிர்த்து அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தி.மு.க. அரசின் ஒன்றரை ஆண்டு ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு. சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்காகத்தின் சார்பாக வெளியாகியுள்ள அறிக்கையின்படி, தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததை அடித்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மேற்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மட்டும் வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, அனைத்து ஒன்றியங்களிலும் 14.12.2022 அன்றும்; 21.12.2022 ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் 16.12.2022 அன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் அதிமுக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %