0 0
Read Time:1 Minute, 7 Second

பரங்கிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் பங்குனி மாதத்தில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை செல்வவிநாயகர் கோவிலில் 7-ம் ஆண்டு பால்குட ஊர்வலம் மற்றும் பால் குடம் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, விநாயகருக்கு 70 குடம் பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவு 7 மணிக்கு செல்வ விநாயகர் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %