0 0
Read Time:1 Minute, 35 Second

கடலூா்: கடலூா் மாவட்டத்துக்கு மூன்று நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் மாா்ச் 3 முதல் 5- ஆம் தேதி வரையில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயிா்களில் மழைநீா் தேங்கா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்த நெல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

இந்த நாள்களில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆகவே, மீனவா்கள் கடலுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும். புகாா்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %