Read Time:1 Minute, 5 Second
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு முதல் பூம்புகார் வரை சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு 13 கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையில் பூம்புகாரில் நேற்று நடைபெற்ற சுருக்கு மடி வலை ஆதரவு கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் பழையார்,திருமுல்லைவாசல்,மடவாமேடு,பூம்புகார்,சந்திரபாடி உள்ளிட்ட கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்வது எனவும் அந்தந்த கிராமங்களில் இருந்து நடைபயணமாக சென்று சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் குடும்பஅட்டை,வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.