0 0
Read Time:3 Minute, 25 Second

ரிசர்வ் வங்கியின் 2025 குழு ஆண்டில் உதவியாளர் பிரிவில் உள்ள 650 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை பொதுப்பிரிவு – 346, Ews -58, ஒபிசி – 99, எஸ்சி – 110, எஸ்டி – 37 என நிரப்பப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 70 இடங்கள் உள்ளன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரி 16 முதல் தொடங்கிய நிலையில் மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தகுதிகள் என்னென்ன…?

வயது வரம்பு : 2026.02.01 தேதியின் படி,விண்ணப்பதார்கள் 02.02.1998 முன்னர் பிறந்தவராக இருக்கக்கூடாது. 20 முதல் 28 வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினர் 31 வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 33 வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 வருடங்கள் வரையும் வயது தளர்வு உள்ளன. முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அதிகபடியாக 50 வயது வரை தளர்வு உள்ளது. கணவரை இழந்த, விவகாரத்து பெற்ற மற்றும் பிரிந்து வாழும் பெண்களுக்கு 35 வயது வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி : விண்ணப்பதார்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் அலுவலகத்தின் மொழியை பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : உதவியாளர் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.29,000 ஆகும். அதன்படி ரூ.29,000 முதல் ரூ.78,640 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை என்ன…?

முதல்நிலை, முதன்மை மற்றும் மொழி திறன் தேர்வு மூலம் இப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மொழி தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்வாகும் நபர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி..?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ ST/ PwBD/ EXS பிரிவினர் ரூ.50 மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடக்கம் : பிப்ரவரி 16

கடைசி தேதி : மார்ச் 8

முதல்நிலைத் தேர்வு : ஏப்ரல் 11

முதன்மை தேர்வு : ஜூன் 7

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %