இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்பத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக் கூடும் எனவும்,
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி,
இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இது, 24 மணிநேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் எனவும் தெரிவித்துள்ளது.