0 0
Read Time:1 Minute, 45 Second

Income Tax Return | காலக்கெடு நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், ஒரே நாளில் அதிகம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் ஐடிஆர் இணையதளம் முடங்கியது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒரு நாள் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

மாத சம்பளதாரர்கள், இதர வருவாய் பிரிவினர் தாங்கள் ஈட்டிய வருமானத்திற்கு வரி கணக்கை தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு ஜூலை 31 என அறிவிக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, காலக்கெடு நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், ஒரே நாளில் அதிகம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் ஐடிஆர் இணையதளம் முடங்கியது.
இந்நிலையில், அதிகாலை 12 மணி முதல் 2.30 மணி வரை தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை இன்று ஒரு நாள் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது

நாளை முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு ஆண்டு வருமானத்திற்கு ஏற்றபடி அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %