கடந்த 24 -6- 2025 முதல் வசப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெகன்மோகன் வயது- 47 (பொறியாளர் அ.ம.பல்கலைகழகம்) என்பவர் தனக்கு சொந்தமான இறால் குட்டையில் பொருத்தப்பட்டிருந்த 2 ஹெச்பி திறன் கொண்ட ஏழு மின் மோட்டார்கள் காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் வழக்கு பதிவு செய்தார்.
உதவி ஆய்வாளர் திரு.பிரகாஷ் மற்றும் பெண்காவலர்கள் திருமதி. சங்கரி,திருமதி.திரிபுர சுந்தரி,
,திருமதி .சுமதி,திருமதி இந்திராகாந்தி ஆகியோர் கொண்ட குழு விசாரணை செய்ததில், அதே ஊரைச்சேர்ந்த
வேல்முருகன் மகன் விஜயராகவன் வயது (20) வசபுத்தூர் என்பவர் திருடியது தெரிய வந்தது.
மேற்படி நபரிடம் இருந்து 5 மோட்டார்களும் இரண்டு மோட்டாரில் இருந்து பிரிக்கப்பட்ட செம்பு கம்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்த மதிப்பு 50,000.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி