0 1
Read Time:5 Minute, 5 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறை, செப்டம்பர்- 30;
நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தலைமையால் நியமிக்கப்பட்டு கட்சிப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து நிவேதா எம்.முருகன் எம் எல் ஏ வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலை மற்றும் செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிகளில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு. ஞானவேலன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தரங்கை பேரூர் மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் மாவட்ட தகவல் தொழிற்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றனர்.

திராவிட முன்னேற்ற கழகம் தலைமை 15 ஆவது தேர்தலின் நாகை வடக்கு மாவட்டம் ( மயிலாடுதுறை மாவட்டம்) அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர்கள்.

அவைத் தலைவர் கே.ஜி.சீனிவாசன்
நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் பூம்புகார் எம் எல் ஏ, துணைச் செயலாளர் (பொது) மு. ஞானவேலன்
துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) சி செல்வமணி
துணைச் செயலாளர் (மகளிர்) கண்ணகி
பொருளாளர் மகா .அலெக்சாண்டர்

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்

  1. மு. பன்னீர்செல்வம்
  2. முத்து. மகேந்திரன்
  3. ஜி.என்.ரவி
  4. இராம.இளங்கோவன்

பொதுக்குழு உறுப்பினர்கள்

  1. ஜெ. கபிலன்
  2. எஸ். சங்கரநாராயணன்
  3. பி. கென்னடி
  4. அ, காந்தி 5. ஹேப்பி ஹர்ஷத்
  5. சி. சுவாமிநாதன்
  6. வின்சென்ட்
  7. எஸ்.வெற்றிவேல்
  8. சிவதாஸ் 10. சுபா நெடுஞ்செழியன்

ஒன்றியக் கழகச் செயலாளர்கள்

சீர்காழி கிழக்கு பஞ்சு. குமார், சீர்காழி மேற்கு ஜெ. பிரபாகரன், கொள்ளிடம் மேற்கு எஸ். ரவிக்குமார், செம்பனார்கோவில் வடக்கு பி எம் அன்பழகன், செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல்மாலிக்,
மயிலாடுதுறை வடக்கு என். இளையபெருமாள்,
மயிலாடுதுறை மத்திய ஞான இமயநாதன், குத்தாலம் கிழக்கு
மங்கை எம். சங்கர் குத்தாலம் வடக்கு
கு.வைத்தியநாதன்,
குத்தாலம் மேற்கு ஏ.ஆர்.ராஜா, கொள்ளிடம் கிழக்கு மலர்விழி திருமாவளவன்.

நகரக் கழகச் செயலாளர்கள்

மயிலாடுதுறை என். செல்வராஜ்
சீர்காழி – ம. சுப்பராயன்

பேரூர் கழகச் செயலாளர்கள்

வைத்தீஸ்வரன்கோவில்
எம். அன்புச்செழியன், தரங்கம்பாடி எஸ்.கே. முத்துராஜா, மணல்மேடு – என். அண்ணாதுரை, குத்தாலம் எம். சம்சுதீன் ஆகியோர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

You missed